துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் மாவட்டம் சென்றிருந்தார். நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து அவரது காலை தொட்டு ஆசி பெற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஓஹோ இதான் திமுக கற்றுத் தந்த சுயமரியாதையா, இதுதான் திமுக சமூக நீதி ஆட்சியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
