73 வயது முதியவர் ஒருவர் ஸ்கேட்டிங் செல்வது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இகோர் என்னும் இந்த முதியவரின் வியப்பான ஸ்கேட்டிங் பயண வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இகோர் ஸ்கேட்டிங் செல்வது பலருக்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், தான் விரும்பியதைச்செய்ய வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். எனினும், 1981 ஆம் ஆண்டுமுதல் ஸ்கேட்டிங் சென்றுவருகிறார் இகோர்.
ஸ்கேட்டிங் செல்லும்போது இகோர் முகத்தில் பயமோ தயக்கமோ இல்லை.
இன்றைய சமூகத்தில் பலர் 40 வயதாகிவிட்டாலே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்து போய்விடுகின்றனர்.
ஆனால், தள்ளாத வயதிலும் மனம் தளராமல் 73 வயது முதியவர் சாலையில் ஸ்கேட்டிங் செல்வது பலருக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
இகோர் ஸ்கேட்டிங் செல்லும் இந்த வீடியோவை 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
வாழ்க்கையை இகோர் எப்படி ரசித்து வாழ்கிறார் பார்த்தீர்களா….
இந்த இளைஞரின் உற்சாகமான ஸ்கேட்டிங் உங்களுக்கும் ஸ்கேட்டிங் போக ஆசை வந்துவிட்டதா..?