கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சோதனை நடத்தினர். அதில், இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, திப்பனூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயகுமார், ஹரீஷ் பாபு, பரந்தாமன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.