தலைநகர் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
அதே போல சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் மக்கள் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.