கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில், மக்கள் ஆராவாரத்தோடு அதற்காக தயாராகி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பல லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார் முதியவர் ஒருவர்.
எடி ரிச் என்ற அந்த நபர் 1995 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்து இணையத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் நல்ல பிரபலமும் ஆகியுள்ளார். லட்சக்கணக்கில் பணமும் கிடைத்துள்ளது. இப்படி கடந்த ஆண்டு மட்டும் இந்திய மதிப்பில் ரூ.44 லட்சம் ரூபாய் வருமானமாக ஈட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து தெரிவித்த எடி, “நான் மக்களை கவனித்து கொள்ள விரும்புகிறேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு திரும்பித்தர விரும்புகிறேன். மக்களை சிரிக்க வைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேட்போரை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.