இலங்கையில் பயணிகள் ரயில் மோதி 6 காட்டு யானைகள் உயிரிழந்ததும், ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கையின் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறது. அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில், தண்டவாளத்தில் சென்ற 6 யானைகளும் ரயில் மோதி உயிரிழந்திருக்கின்றன.
இதில் ஒரு யானை மட்டும் காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், தாய் யானையான அந்த யானை, தன் குட்ட்டியை காப்பாற்ற நடத்திய பாசப்போராட்டம் வீடியோ காட்சிகளாக வெளியாகி மனதை ரணமாக்கியது. மேலும் இந்த விபத்தில் ரயிலும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.