சென்னை கண்ணகி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (எ) ஸ்ரீஜி (26). இவா் மனைவி வினிஷா (23). தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே இரு குழந்தைகள் இருப்பதால், மூன்றாவது குழந்தையை விற்க பெற்றோா் முடிவு செய்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.2.20 லட்சத்துதுக்கு பேரம் பேசி அண்மையில் விற்பனை செய்துள்ளனா். இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ராஜேஸ்வரி, கண்ணகி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தார்.
புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தந்தை ஸ்ரீதா், தாய் வினிஷா, சரளா (45), சுமதி (35), ஸ்ரீஜா (24), சிவரஞ்சனி (22) உள்ளிட்ட 6 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.
