Sunday, December 28, 2025

தீபாவளி கொண்டாட்டம் : சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து அதிகளவில் பயணம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் 6,15,922 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அக்டோபர் 16ம் தேதி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 2853 பேருந்துகளில் 1,28,275 பேர் பயணித்துள்ளனர். அக்டோபர் 17ம் தேதி இயக்கப்பட்ட 4926 பேருந்துகளில் 2,56,152 பேர் பயணித்துள்ளனர்.

நேற்று மட்டும் மொத்தம் 4926 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் 2,56,152 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணித்து இருக்கின்றனர்.

Related News

Latest News