டூ வீலர், கார் என வாகனம் வைத்திருப்பவர்கள் அனைவருமே எரிபொருள் நிரப்ப அவ்வப்போது பெட்ரோல் நிலையங்களுக்கு செல்வது வாடிக்கை.
ஆனால், பெட்ரோல் பங்கில் கிட்டத்தட்ட ஆறு இலவச சேவைகளை பெற முடியும் என உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்!
பைக் மற்றும் கார் டயர்களில் காற்று குறைவாக இருந்தால், பெட்ரோல் பங்கில் இலவசமாக காற்று நிரப்பிக் கொள்ளலாம். அப்படியே மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் தாராளமாக புகார் அளிக்கலாம். பெட்ரோல் நிலையங்களில் கட்டாயம் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். இந்த சேவைகளை பெறுவதற்கு பெட்ரோல் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என அவசியமில்லை. யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
பெட்ரோல் நிலையங்களில் அலைபேசி பயன்படுத்தக் கூடாது என்பார்கள். அங்கிருக்கும் தொலைபேசி வசதியை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். சிறிய காயம் ஏற்பட்டு இருந்தால் பெட்ரோல் நிலையத்தில் இருக்கும் முதலுதவி பெட்டியில் இருக்கும் பொருட்களை இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
அங்கு நிரப்பப்படும் பெட்ரோலின் தரத்தில் சந்தேகம் இருந்தால், Filter Paper சோதனையை கேட்டு பெட்ரோலின் தரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த தரப்பரிசோதனையும் மக்களுக்கு கிடைக்க கூடிய இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது.