ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் அக்ஷயா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அக்ஷயா சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்த அவரது அக்கா மஞ்சுளா இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அக்ஷயாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அக்ஷயா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.