Saturday, December 21, 2024

செல்லப்பிராணிக்கு லிஃப்ட் கொடுத்த தம்பதி

செல்லப்பிராணிக்கு டூ வீலரில் லிஃப்ட் கொடுத்த தம்பதியின் வீடியோ இதயங்களை வருடிவருகிறது.

செல்லப்பிராணிகளில் எத்தனை வகை இருந்தாலும், அவற்றில் முதலிடம்பெறுவது நாய் மட்டுமே. செல்லப்பிராணி வளர்ப்போர் பலரும், படுக்கையறை வரை இல்லத்துக்குள் செல்லும் உரிமை நாய்க்கு மட்டுமே தருகின்றனர்.

காரில் செல்லும்போதுகூட காரின் முன்னிருக்கையில் அந்த குடும்ப உறுப்பினரை உட்கார வைக்கின்றனர். ஆனால், சிலர் தாங்கள் எங்குசென்றாலும், தங்களின் வாகனத்தில் அந்த ஜீவனுக்கு இடம் தருவதில்லை. வருத்தப்பட வைக்கும் அப்படியொரு சம்பவம் அண்மையில் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

தாங்கள் மட்டும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்க, அவர்களின் செல்லப்பிராணி, எஜமானரின் டூ வீலரைப் பின்தொடர்ந்து சென்றது. அதைப் பார்த்த, வேறொரு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள், செல்லப் பிராணியை ஓடிவரச்செய்த வாகன ஓட்டியிடம் சென்று இப்படிச் செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தினர். பிறகு, அந்த ஜீவனைத் தங்கள் இரு சக்கர வாகனத்தின் முன்பக்கமுள்ள பிளாட்ஃபார்ம் பகுதியில் ஏற்றிக்கொண்டு எங்குசெல்லவேண்டுமோ அங்குகொண்டுசென்று இறக்கிவிட்டுள்ளனர்.

அந்த மனிதாபிமான செயல் அனைவரின் மனதையும் நெகிழச்செய்துவிட்டது.
நன்றியுள்ள அந்த ஜீவனோ வாலாட்டி தனது நன்றியைத் தெரிவித்து உயர்ந்துவிட்டது.

Latest news