ரயில்வே துறையில் 5,810 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, தேர்வு கட்டணம், வேலைகள் குறித்த விவரங்கள், முக்கிய தேதிகள் ஆகிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் (Chief Commercial cum Ticket Supervisor) – 161 காலியிடங்கள்
- ரயில் நிலைய மாஸ்டர் (Station Master) – 615 காலியிடங்கள்
- சரக்கு ரயில் மேனேஜர் (Goods Train Manager) – 3,416 காலியிடங்கள்
- ஜூனியர் கணக்கு உதவியாளர் தட்டச்சர் (Junior Accounts Assistant Cum Typist) – 921 காலியிடங்கள்
- சீனியர் எழுத்தர் மற்றும் தட்டச்சர் (Senior Clerk Cum Typist) – 638 காலியிடங்கள்
- போக்குவரத்து உதவியாளர் (Traffic Assistant) – 59 காலியிடங்கள்
கல்வி மற்றும் வயது தகுதிகள்
மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு ஆங்கிலம் அல்லது हिंदी மொழிகளில் கணிணி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை; OBCக்கு 3 வருட தளர்வு, SC/STக்கு 5 வருட தளர்வு வழங்கப்படும்.
ஊதிய விவரம்
- தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர், ரயில் நிலைய மாஸ்டருக்கு – ரூ.35,400 தொடக்க சம்பளம்
- சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் கணக்கு உதவியாளர் தட்டச்சர் மற்றும் சீனியர் எழுத்தர் தட்டச்சருக்கு – ரூ.29,200 தொடக்க சம்பளம்
- போக்குவரத்து உதவியாளருக்கு – ரூ.25,500 தொடக்க சம்பளம்
விண்ணப்பிக்கும் முறை
மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மற்றும் SC, ST பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.250 ஆக வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
இரு கட்ட கணினி வழி தேர்வு மற்றும் திறன் தேர்வு. முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்திற்கு செல்லலாம். சரக்கு ரயில் மேனேஜர் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணிகளுக்கு திறன் தேர்வு இல்லை.
முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்கம்: 21.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2025
- கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.11.2025
- விண்ணப்ப திருத்தம்: 23.11.2025 முதல் 02.12.2025 வரை
