மாநிலம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 3 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தலைமையிட ஏடிஜிபியாக இருந்த வினித் தேவ் வான்கடே டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் அரியலூர் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related News

Latest News