500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த சூப்பர் திட்டம்…!

98
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (6.6.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் சென்னை,

தேனாம்பேட்டை, விஜயராகவா சாலையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக 125 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் அமைந்திருப்பதைப் போல நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் 110 விதிகள் அறிவித்துள்ளேன்.708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்க உத்தரவிட்டேன்.

கடந்த 01.04.2022 அன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பிற்கிணங்க அங்கு நகர்ப்புறங்களில் இயங்கி வரும் ‘மொகல்லா கிளினிக்’ எனப்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தைப் பற்றி நான் பார்வையிட்டேன். நமது துறையினுடைய அமைச்சரும், அதிகாரிகளும் வந்தார்கள்.

அப்போது, ஏற்கனவே தமிழ்நாட்டில் கிராமப்புற சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம், அதை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என நினைத்தோம். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் உட்கட்டமைப்பு ஏற்பாட்டிற்கான அனுமதி 2021-22 ஆம் ஆண்டு 593 மையங்களுக்கும் 2022-23 ஆம் ஆண்டு 115 மையங்களுக்கும் அளிக்கப்பட்டது. இவற்றுக்கான கட்டடப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் இன்றைய நாள் திறக்கப்பட்டு உள்ளன. இதன் மொத்த மதிப்பு 125 கோடி ரூபாய்!