500 புதிய ஆவின் பாலகங்கள் திறக்கப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை இன்று தொடங்கியதும், தூத்துக்குடி மாவட்டம் நல்லம்பள்ளி, தம்மம்பட்டி ஊராட்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு முன் வருமா? என்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தருமபுரி மாவட்டத்தில் 55 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது என்றும், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 26 உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
அம்மன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து 400 லிட்டர் பால் வருகிறது என்றும், இடத்தை கொடுத்தால் அரசு உடனடியாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், 500 புதிய ஆவின் பாலகங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் பால் வளத்துறை அமைச்சர் ராஜாக்கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.