Sunday, December 21, 2025

Homework செய்ய மொத்த வித்தையை இறக்கிய சுட்டி சிறுமி

சீன ஒளிப்பதிவாளர் சாங் ருய்க்ஸினின் ஐந்து வயது மகள் மெங் மெங், கை தேர்ந்த ஒளிப்பதிவாளர் போல 75,000 டாலர் மதிப்பு கொண்ட V-Raptor ரக கேமெராவை அசால்ட்டாக operate செய்து அசத்தி உள்ளார்.

‘Observation of Small Animals’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்திற்காக, இந்த கேமெராவை பயன்படுத்தி மெங் எடுத்த வீடியோ சீன சமூகவலைத்தளமான வீபோவில் வெளியாகி 180 மில்லியன் viewsஐ கடந்து வைரலாகி வருகிறது.

மெங் மெங்கின் தந்தை, தாத்தா என அனைவரும் ஒளிப்பதிவு துறையில் இருக்கும் நிலையில், அவ்வப்போது மகளை படப்பிடிப்பு தளத்துக்கு தந்தை அழைத்து சென்றதாலேயே, சிறுமிக்கு இயல்பாகவே கேமெராவை இயக்கும் திறனும் ஆர்வமும் அதிகரித்து இருப்பதாக கருதப்படுகிறது. 

Related News

Latest News