https://www.instagram.com/p/CVIx8cnjSmK/?utm_source=ig_web_copy_link
5 வயது சிறுமியின் அசத்தல் நடன வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சிறுமி பேபி சலோமெரிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அவரது திறமையை வெளியுலகம் வியந்து பார்க்க வைத்துள்ளது.
சிறுமியின் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். அதில், 700க்கும் அதிகமான வீடியோக்களை பேபி சலோமெரிவாஸ் பதிவேற்றியுள்ளார்.
ஒவ்வொரு வீடியோவும் வித்தியாசமாக இருந்தாலும், தற்போது பதிவிட்டுள்ள நடன வீடியோ அனைவரையும் சட்டென்று கவர்ந்துவிட்டது.
அந்த வீடியோவில், விழா ஒன்றில் மேடையில் பிற நடனக் கலைஞர்களை மிஞ்சும் அளவுக்கு அவர்களோடு போட்டிபோட்டு மின்னலாக வளைந்து வளைந்து ஆடும் நடனம் அனைவரின் கண்களையும் விரிய வைக்கிறது.
சமூக ஊடகத்தில் வைரலாகும் பேபி சலோ மெரிவாஸின் நடனம் உங்கள் குழந்தையையும் இதுபோல உருவாக ஊக்கமளிக்கலாம்.