கொலஸ்ட்ரால் இருக்கும் நபர்கள் கொலஸ்ட்ராலை மேலும் அதிகரிக்கக் கூடிய உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
அதிலும், காலையில் முதலில் சாப்பிடும் உணவுகள் அன்றைய தினத்தின் உடல் செயல்பாடுகளை தீர்மானிக்க கூடியது என்பதால், கொலட்ஸ்ரால் நோயாளிகள் சாப்பிட சரியான ஐந்து உணவுகளை இப்பதிவில் பார்ப்போம்.
Instant வகை உணவுகளையும் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும். பழங்கள் சேர்த்த ஓட்ஸ் கஞ்சி சுவையான மற்றும் ஆரோக்கியமான தேர்வாக அமையும். ஓட்ஸில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்து LDL எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ள முட்டைகள் காலை உணவாக சாப்பிட சிறந்தது. அதிகமான கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. முன்னதாக அரிதாக பார்க்கப்பட்ட அவோகேடோ பழம் தற்போது பரவலாக காய்கறி கடைகளிலேயே கிடைக்கிறது.
HDL என்ற நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, திருப்தியான உணர்வை அளிப்பதன் மூலம் அவ்வப்போது நொறுக்கு சாப்பிடும் எண்ணத்தை கட்டுப்படுத்த உதவும். ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய பெர்ரி வகை பழங்களை காலையில் சாப்பிடுவது சிறப்பான பலன்களை தரும். புரதம் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த கிரேக்க யோகர்ட்டில் விருப்பமான பழங்களை கலந்து சாப்பிடுவது மேம்பட்ட ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, நிம்மதியான தூக்கத்தை உறுதி செய்வது, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது ஆகிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடித்தாலே கொலஸ்ட்ரால் பாதிப்பை படிப்படியாக குறைக்க முடியும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.