திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கணவரை பிரிந்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். மஞ்சுளாவின் உறவினருக்கும், திவ்யா என்ற பெண்ணிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், மஞ்சுளாவின் வீட்டிற்கு வந்த திவ்யாவின் கணவர் உள்பட 6 பேர் கொலை மிரட்டல் விடுத்து, குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், 5 பேரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள கலைச்செல்வன் என்பவரை தேடி வருகின்றனர்
