பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு கார்களில் போதைப்பொருட்களை கடத்தி செல்வதாக விழுப்புரம் ASP ரவீந்திர குப்தா குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், போலீசார் விழுப்புரம் நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்த முயன்றபோது, சொகுசு கார் ஓட்டுநர் காரை வேறு பகுதிக்கு திருப்பி போலீசாரிடம் இருந்து தப்பியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் காரை பின்தொடர்ந்து பிடிக்க முயன்றனர். இதனை அடுத்து அரகண்டநல்லூர் எல்லை பகுதியான அய்யனார் கோவில் அருகே காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கார் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றனர். பின்னர், அப்பகுதியில் தனிப்படை போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் ஜம்தா ராம் மற்றும் மனீஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.