Wednesday, March 12, 2025

உலக மக்கள் தொகையில் 40 சதவீத பேருக்கு தாய்மொழியில் கல்வி கிடைப்பதில்லை

உலக மக்கள் தொகையில் 40 சதவீத பேருக்கு தாய்மொழியில் கல்வி கிடைப்பதில்லை என யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்வதேச தாய்மொழி தினத்தின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த உலகளாவிய கல்வி கண்காணிப்பு குழு, மொழிகளின் முக்கியம், பன்மொழி கல்விக்கான உலகளாவிய வழிகாட்டுதல் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று உலகளவில் 40 சதவீத மக்கள் தாங்கள் சரளமாக பேசும், புரிந்து கொள்ளும் மொழியில் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியின் பங்கு குறித்த நாடுகளின் புரிதல் மேம்பட்ட போதிலும், தாய்மொழியில் கற்பித்தல் கொள்கையை ஏற்றுக் கொள்வது என்பது குறைவாகவே உள்ளதாகவும், இதற்கு போதுமான ஆசிரியர் திறன், தாய்மொழியில் வளங்கள் கிடைக்காதது மற்றும் சமூக எதிர்ப்பு ஆகியவை பெரும் சவாலாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Latest news