சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் ஏரிக்கரை பகுதியில் பட்டாகத்தி உள்ளிட்ட போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நான்கு பேர் சுற்றி வருவதாக காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பத்தூர் காவல்துறையினர் பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அத்துடன் மோனிஷ்குமார், ஜான், கார்த்திக், ஹரிஸ் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதானதில் மோனிஷ் குமார் என்பவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. கைதான 4 பேரிடம் விசாரித்ததில் மது அருந்த ஏரிக்கரை பகுதிக்கு சென்றதாகவும் தங்களின் பாதுகாப்புக்காக கத்தியை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.