Sunday, December 22, 2024

பயங்கர வேகத்தில் சென்ற கார் மோதி விபத்து – 4 பேர் காயம்

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரை ஓட்டி வந்த நபர் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த பிரகதீஷ் (29) என்பதும் அதிவேகமாக கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news