கடந்த வெள்ளியின்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண வந்த ரசிகர்களின் செல் போன்கள் திருடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடியது தெரிய வந்துள்ளது.