நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் நகரில் கலை மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், எகிப்துக்கு சொந்தமான ஒரு கல்சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த சிற்பம் எகிப்து மன்னர் மூன்றாம் துட்மோஸ் வம்சத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனவும், சட்ட விரோதமாக இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட நிலையில், அங்கு நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது. இந்நிலையில் எகிப்துக்கு சொந்தமான கல்சிற்பத்தை நெதர்லாந்திடம் திருப்பி ஒப்படைப்பதாக பிரதமர் டிக் ஸ்கூப் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பி வழங்கப்படும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், 2025ம் ஆண்டின் இறுதிக்குள் நெதர்லாந்தில் உள்ள எகிப்திய தூதரிடம் இந்த கலைப்பொருளை ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
