Thursday, March 13, 2025

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஷாக் கொடுத்த நிர்வாகிகள்

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்தது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலும் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் 30 பேர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை (பிப்.11) பஞ்சாப் செல்கிறார். அங்கு மாநில அமைச்சர்கள், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருடன் கலந்து பேசுகிறார். சந்திப்பின் போது டில்லி தேர்தல் தோல்வி பற்றியும், 2027ம் ஆண்டு வரவிருக்கும் பஞ்சாப் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Latest news