கோவை, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் 13 வீடுகளில் 56 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் சுட்டு பிடித்தல் பரபரப்பு…
கோவை, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட்டில், 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்தனர்.இவர்கள் அங்கு உள்ள குடியிருப்பில் பூட்டி இருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
முதலில் ஒரு வீட்டில் இருந்து, தங்களது வீட்டில் இருந்த நகை – பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்தின் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காவல்துறை விசாரணையில் பல்வேறு வீடுகளில் நகை – பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
அங்கு உள்ள ஏ பிளாக் கட்டிடத்தில் உள்ள மூன்று வீடுகளிலும், சி பிளாக் கட்டிடத்தில் உள்ள 10 வீடுகளிலும் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை அடித்தது தெரியவந்தது. என மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகை ரூபாய் 3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது
இதைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு உள்ள கைரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஹவுசிங் யூனிட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பிடிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 3 தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக ஆட்டோவில் வந்து இறங்கியதும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு சாதாரண குடியிருப்புவாசி போன்று நடந்து வெளியே வரும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி மற்றும் கை ரேகையை வைத்து கொள்ளையர்களை கண்டுபிடித்தினார். அவர்கள் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஆசிக், கல்லூர், இர்பான் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் கொள்ளையர்களை சுட்டு பிடித்தனார்.
அதாவது, குனியமுத்தூர் குளத்துபாளையம் பகுதியில் கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
3 கொள்ளையர்களை போலீசார் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.. பின்னர், சுடப்பட்டவர்கள் வட இந்தியர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் சுட்டு பிடித்ததை உறுதிப்படுத்தினார். இப்படி கொள்ளையர்களை துரிதமாக பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
