பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 1901ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு(nobel Prize), உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில், 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow) பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி(Shimon Sakaguchi) ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் – ஹமாஸ், இந்தியா – பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தியதால், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுள்ளார். எனவே, அக்.,10ம் தேதி அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.