அசாமில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூன்றுபேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூன்றுபேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
கடந்த மாதம் அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா பா.ஜ.க.வில் இணைந்தநிலையில், இந்த விலகல் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
