Wednesday, February 4, 2026

பாகிஸ்தான் சுதந்திர தினத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் 3 பேர் பலி

பாகிஸ்தானில் இன்று (ஆகஸ்ட் 14) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கராச்சி நகரில் சுதந்திர நாளை கொண்டாடும் வகையில் ட்ரோன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 8 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 64 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 20 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related News

Latest News