பிரபல உணவு மற்றும் போக்குவரத்து நிறுவனமான Taste Atlas, உணவுகள் குறித்த தகவல்களை வரிசைப்படுத்தி வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அந்தவகையில் தற்போது உலகில் அதிகம் விரும்பப்படும் டாப் 50, காலை உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ஜனவரி தொடங்கி ஜூன் வரையிலான இந்த பட்டியலில், முதல் இடத்தை துருக்கி உணவான Kahvaltiயும், 2வது இடத்தை செர்பிய உணவான Komplet Lepinjaவும் தக்க வைத்துள்ளன. இதில் 3 இந்திய உணவுகள் இடம்பிடித்து ஆச்சரியமளித்துள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
லிஸ்டில் 18வது இடத்தை மகாராஷ்டிரா உணவான Misal Pav, 23வது இடத்தை பரோட்டா மற்றும் 32வது இடத்தை டெல்லியின் Chole Bhature பிடித்துள்ளது. இந்திய மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் 3 உணவுகள் இடம்பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.