கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சண்டை நிறுத்தம் அமலாகியுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதில் சிப்கதுல்லா, ஹாரூன், கபீர் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
