Monday, February 16, 2026

சென்னையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை, ஐயப்பந்தாங்கல் ஆயில்மில் தெருவில் வசித்து வரும் அஸ்வின் (23) தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அது கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி திருடப்பட்டது. அதேபோல், பிப்ரவரி 10ஆம் தேதி செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தயாளன் (49) அவர்களின் இருசக்கர வாகனமும் திருடப்பட்டது.

இருவரும் வானகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த சுனில் (23), சிலம்பரசன் (26), ஹானஸ்ட் ராஜ் (20) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புகாரளித்த இருவரின் இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுனில் மீது ஐந்து குற்றவழக்குகளும், சிலம்பரசன் மீது இரண்டு குற்றவழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News