Wednesday, April 2, 2025

குடிபோதையில் பைக்கில் சென்று கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது காரில் அவரது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற 3 நபர்கள் சஞ்சீவியின் கார் பின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கெடிலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த திருநாவலூர் காவல்துறையினரிடம் சஞ்சீவி தகவல் அளித்ததின் பேரில் ராஜேஷ், ராஜா, வினோத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Latest news