சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கட்டையால் தாக்கிவழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த மூன்று மாதங்களாக காவலாளியாக வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஹர்சிங் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் ஹர்சிங்கிடம் செல்போனை கேட்டதாகவும், அவர் செல்போனை தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஹர்சிங்கை கட்டையால் தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். பலத்த காயமடைந்த ஹர்சிங்கை சக பணியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் ஹர்சிங் புகார் அளித்ததனி பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.