ஒட்டன்சத்திரம் அருகே வங்கதேசத்தை சேர்ந்த 29 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சியில், தனியாருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வங்கதேசத்தை சேர்ந்த 29 பேர் தங்கியுள்ளதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வங்கதேசத்தை சேர்ந்த 29 பேரை கைது செய்தனர். மேலும், ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News