Monday, April 21, 2025

மின்கசிவால் 2,500 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழப்பு

ஈரோட்டில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 500 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

ஈரோடு மாவட்டம் ஜே.ஜே நகரில் பாலசுப்ரமணி என்பவர், 16 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கோழிபண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற, தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 500 கோழி குஞ்சுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news