ஹரியாணா சட்டப்பேரவையில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஆகஸ்ட் மாதம், சில ஆதாரங்களை வெளியிட்டார்.
இதையடுத்து கர்நாடக மாநிலம் ஆலந்த் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டை வைத்தார்.
இந்த நிலையில், ’எச் பைல்ஸ்’ என்ற தலைப்பில் சான்றுகளை வெளியிட்டுள்ளார். அதில் மிக முக்கியமாக 2 கோடி வாக்காளர்களை கொண்ட ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
