மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் பனாரஸில் இருந்து ராமநாதபுரம் சென்ற விரைவு ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் சுமார் 25 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் தம் பாக்குகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீஸார், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.