Tuesday, January 13, 2026

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி – அதிபர் டிரம்ப் உத்தரவு

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் எனக் கூறிய அவர் இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகித வரியும் பின்னர், கூடுதல் 25 சதவிகித வரிவிதித்தார். டிரம்ப்பின் நடவடிக்கையை மீறிய இந்தியா, சீனாவுக்கு கூடுதலாக 500 சதவிகித வரி விதிப்பு குறித்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவிகித உடனடி வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “ஈரானின் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உடனடியாக 25 சதவிகித வரிவிதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வந்த இந்த வரிவிதிப்பானது இறுதியானது மற்றும் உறுதியானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

Latest News