Friday, May 23, 2025

24 கேரட், 22 கேரட், தங்கத்தை ஓரம்கட்டிய 18 கேரட் தங்கம்! விற்பனையில் கொடிகட்டி அதிரடி! விலை ரொம்ப குறைவு!

உலக அளவில் தங்கத்தின் விலை ஒருநாள் அதிகரித்து அதிர்ச்சி கொடுப்பதும் அடுத்தநாள் கொஞ்சம் குறைந்து ஆறுதல் அளிப்பதும் என மக்களை தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. ஆனாலும் சராசரியாக பார்த்தால் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து தான் வருகிறது. இந்நிலையில்தான் தற்போது களமிறக்கப்பட்டுள்ள 18 கேரட் தங்கம் விற்பனையில் சக்கை போடு போடுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரட் என்பது தங்கத்தின் தூய்மையை கணக்கிட பயன்படும் ஒரு அளவீடு. பொதுவாக இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். எந்த அளவுக்கு  கேரட் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தங்கம் தூய்மையானதாக இருக்கும்.

24 காரட் சுத்த தங்கத்தில் வேறு எந்த உலோகமும் கலக்கப்படாது. 18 கேரட் தங்கத்தில் 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும். 22 கேரட் தங்கத்தில் 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 மடங்கு மற்ற உலோகங்களின் கலப்பு இருக்கும்.

தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது என்றாலும் அதன் விலையும் அதிகம். அதே சமயம் RBI விதிகளின் படி நீங்கள் அதிகளவு தங்கத்தை வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. அதற்கு என்று ஒரு வரம்பு இருக்கிறது. இந்நிலையில் 18 கேரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளார். இது பாரம்பரியமான 22 கேரட்டை விட ஏறத்தாழ 20% குறைவு என்பதால் இதன் விலையும் குறைவு. இதனால் மக்கள் பலரும் இந்த 18 கேரட் தங்கத்தை நோக்கி படையெடுப்பது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு செய்தி மட்டுமே. இதனை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

Latest news