கரூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 233 மதுபாட்டில்கள் பறிமுதல்

கரூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 233 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கார் மூலம் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கரூர், சுக்காலியூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில், போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சதீஸ்கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 233 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சதீஸ்கண்ணனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News