Saturday, December 27, 2025

தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு! 23 வயது பிரபல சீரியல் நடிகை உற்சாகம்

மலையாளத்தில் ‘இளையவள் காயத்ரி’ மற்றும் ‘செம்பட்டு’ சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்யா பார்வதி.

பிப்ரவரி 10ஆம் தேதி, 47 வயதான தனது தாயார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிகழ்வு கடந்த வருடம் வெளியான ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு தங்கை பிறந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் மகிழ்ச்சியுடன் ஆர்யா பதிவிட, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ள ஆர்யா, சீரியல்களில் நடிப்பதோடு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பிசியாக ரீல்ஸ்களை செய்து வருகிறார்.

Related News

Latest News