Friday, January 30, 2026

22,000 காலியிடங்கள்., ரெயில்வே துறையில் பணிபுரிய நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க

இந்திய ரெயில்வே துறையில் காலியாக உள்ள 22,000 குரூப் ‘டி’ (நிலை–1) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 2026 பிப்ரவரி 20 ஆகும்.

பணி : குரூப் ‘டி’ (நிலை–1)

காலியிடங்கள் : 22,000

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
ஐடிஐ முடித்து என்சிவிடி / எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது
என்சிவிடி வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (National Apprenticeship) முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2026 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழித் தேர்வு, உடற் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் – ரூ.250
இதர அனைத்து பிரிவினருக்கும் – ரூ.500
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:

https://www.rrbapply.gov.in
https://www.rrbchennai.gov.in

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:

2026 பிப்ரவரி 20, இரவு 11.59 மணி வரை

Related News

Latest News