2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான விளம்பர தூதராக ரோஹித் ஷர்மாவை ஐசிசி நியமனம் செய்துள்ளது.
10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான விளம்பர தூதுவராக ரோஹித் ஷர்மாவை ஐசிசி நியமனம் செய்துள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.
இந்நிலையில், ரோகித் சர்மாவை கவுரவிக்கும் விதமாக அவரை 2026 தொடரின் விளம்பர தூதராக ஐசிசி நியமித்துள்ளது.
