Wednesday, January 14, 2026

2026 ஆங்கில புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து

உலகம் முழுவதும் 2026 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “அனைவருக்கும் 2026 அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்திலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்.” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் நோ்மறை மாற்றத்தின் அடையாளமாக புத்தாண்டு விளங்குகிறது. மேலும், சுய சிந்தனை மற்றும் புதிய தீா்மானங்களுக்கு நல்ல வாய்ப்பாகும். இத்தகைய தருணத்தில், நாட்டின் முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும். 2026 புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளமையைக் கொண்டுவந்து, வலுவான-மிக செழிப்பான தேசத்தைக் கட்டமைக்க புத்தாற்றலைப் புகுத்தட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related News

Latest News