Wednesday, October 1, 2025

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்கள்!! திருவண்ணாமலையில் பரபரப்பு.. என்ன நடந்தது??

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிரபல புனித ஸ்தலம் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து மினி வேனில் வாழைத்தார் ஏற்றி வந்துள்ளனர், அப்போது திருவண்ணாமலை புனித ஸ்தலத்தை தரிசனம் செய்வதற்காக தாய், மகள் என இருவரும் வேனில் லிப்ட்டு கேட்டு திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த மினி வேன் திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதில் புறவழிச் சாலை அருகே, கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு வந்துள்ளதாக தெரிகிறது, அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு பேரும் மினி வேனில் வந்தவர்களை மடக்கி சோதனை செய்தபோது ஓட்டுநர் இரவு நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது வேனில் இருந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரை கீழே இறங்குங்கள் சந்தேகமாக உள்ளது என்று கூறி மிரட்டி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு காவலர்கள் அவர்களது இரண்டு இருசக்கர வாகனத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரையும் தனித்தனியாக புனிதஸ்தலத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் அமர வைத்து திருவண்ணாமலை நோக்கி செல்லாமல் விழுப்புரம் சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தாயை சாலையின் வலது புறத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து பள்ளத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மற்றொரு காவலர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த இளம் பெண்ணை இடது புறம் உள்ள புதரில் கடத்திச் சென்று இரண்டு காவலர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர், பின்னர் அங்கிருந்து விடியற்காலை 4 மணி அளவில் இளம் பெண்ணை அழைத்து வந்து சாலையில் விட்டுவிட்டு காவலர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டு அருகே உள்ள செங்கல் சூலைக்கு சென்றுள்ளார், பின்னர் செங்கல் சூலையில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்று கேட்டறிந்த பின்பு தாயும் அங்கு வந்துள்ளார், அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதனைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு இரண்டு காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து அங்கிருந்து அதிவேகமாக சென்றனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் 2 காவலர்களையும் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு காவலர்களையும் நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புனிதஸ்தலத்தில் தரிசனம் மேற்கொள்ள வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரை கடத்திச் சென்று இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News