திருப்பூர் தெற்கு போலீசார் மப்டியில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இருவரும் பேருந்து நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் , தண்டபாணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பேருந்து நிலையங்களில் கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.