Friday, December 27, 2024

சுனாமி விழுங்கிய மக்கள்…விட்டு சென்ற சோகம்…18 ஆண்டுகளாய் ஆறாத வலி!

2004 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதியன்று கடற்கரையில் காற்று வாங்கி கொண்டிருந்த மக்களுக்கு, சற்று நேரத்தில் கடல் தங்கள் உயிரை காவு வாங்க போகிறதென அறிந்திருக்க வாய்ப்பில்லை.

என்றைக்கும் போல விடிந்த அந்த நாள் ஏற்படுத்திய தாக்கம், 18 ஆண்டுகள் ஆனாலும் தொடர்கிறது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்பட்டது.

அது மட்டுமில்லாமல், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகளால் 14 நாடுகளில் சுனாமி தாக்கியது. 100 அடிக்கும் மேல் உயர்ந்த ஆக்ரோஷமான கடல் அலைகள், இந்தியாவில் மட்டுமே 2 லட்சத்து முப்பதாயிரம் பேரை பலி வாங்கியது.

இந்த எதிர்பாராத இயற்கை பேரிடரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்த சோகம் ஒரு புறம் இருக்க வீடு, உறவினர்கள், உடைமைகள், சான்றிதழ்கள், ஆவணங்கள் என அனைத்தையும் இழந்து ஒரு சாராருக்கு ஒரே நாளில் வாழ்க்கை தலைகீழாக திருப்பி போடப்பட்டது.

இன்றோடு சுனாமி வந்து 18 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் பல்வேறு தரப்பினரும் சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆண்டுகள் கடந்தும் ஆறாத வலியை அளித்து சென்ற ஆழிப்பேரலையின் நினைவு தினமான இந்த நாளும், பல கண்களின் கண்ணீரில் நனையாமல் நகர்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Latest news