வருகிற 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு.பொதுமக்கள் புத்தாடைகள், பொருட்கள் வாங்கவும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராயர் நகர், புரசைவாக்கம், பாண்டிபஜார், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
